• Jan 26 2026

பிக் பாஸில் இருந்து வெளியேறும் போது சபரிக்காக ரம்யா செய்த காரியம் .?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழில் மட்டும் இல்லாமல் கிட்டத்தட்ட ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. தமிழில் கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.  எட்டாவது சீசனில் இருந்து விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். 

கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி 20 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, ஆரம்பத்தில் சலிப்படைய செய்தாலும் நாளுக்கு நாள்  விறுவிறுப்பாக  மாறியது.  அதற்குப் பிறகு நான்கு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் உள்ளே வர,  ஏற்கனவே எலிமினேட் ஆகி வெளியேறிய ஆதிரையும் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் உள்ளே சென்றார். 

இந்த நிலையில், ஆடல் பாடல் நிகழ்ச்சியில் நடன கலைஞராக  காணப்பட்ட ரம்யா ஜோ, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகியுள்ளார். அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது சபரி  அழுத காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


பிக் பாஸ் வீட்டிற்குள் அண்ணன், தங்கை உறவாக  ரம்யா ஜோவும் சபரையும் திகழ்ந்து வந்தனர். இவ்வாறான நிலையிலே ரம்யா வெளியேறும்போது சபரி அழுதுள்ளார்.  மேலும்  ரம்யா போகும்போது சபரிக்காக ஒரு  ஆடல் பாடலையும்  செய்து விட்டுப்  போய் உள்ளார் .

ரம்யா ஜோ ஆச்சிரமத்தில் தனியாக வளர்ந்து,  பணத்திற்காக ஆடல் பாடல் நடன நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.  இதனாலையே சினிமா மீது கனவுகளை வளர்த்து,  தனது முயற்சியால் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். தற்போது அவருக்கென ரசிகர் கூட்டம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement