• Jan 26 2026

ராஜகுமாரனை கல்யாணம் பண்ண இதுதான் காரணம்... உண்மையை உடைத்த நடிகை தேவயானி

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகைகளில் ஒருவர் தேவயானி. எளிமை, இயல்பான நடிப்பு என தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தனது கணவர் ராஜகுமாரன் குறித்த நினைவுகளையும், அவரை வாழ்க்கை துணையாகத் தேர்ந்தெடுத்த காரணங்களையும் மனம் திறந்து பகிர்ந்துள்ளார். அந்த பேட்டி தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.


தேவயானி தனது பேட்டியில், நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான மெகா ஹிட் திரைப்படமான ‘சூர்ய வம்சம்’ படத்தை நினைவு கூர்ந்தார். அந்த படத்தின் போது தனது கணவர் ராஜகுமாரன், உதவி இயக்குநராக (Assistant Director) பணியாற்றியதாக அவர் தெரிவித்தார்.

மேலும் அவர், "சூரியவம்சம் படத்திற்கு பிறகு இரண்டு மூணு வருசத்துக்கு அப்புறம் தான் அவர் டைரக்சனில நடிச்சேன். அவர் கூட இரண்டாவது படம் பண்ணும் போது தான் அவரோட கேரக்டர், அவரோட நல்ல பழக்கம் எல்லாம் புடிச்சது. என்ன ரொம்ப ஊக்கப்படுத்துவார். 


எனக்கு நடிப்புன்னா ரொம்ப புடிக்கும். அதனால என்ன சரியா வழி நடத்துற ஒரு நபர் வேணும்னு நினைச்சி காதலிக்க ஆரம்பிச்சன். எங்க அம்மாவுக்கு அவரை புடிச்சது. அதனால இவர் தான் என் வாழ்க்கைக்கு சரியான நபர்னு முடிவெடுத்தேன்." என்று கூறியிருந்தார். 

தேவயானியின் இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பல ரசிகர்கள் அவரது எளிமையான மனப்பான்மையையும், வாழ்க்கையைப் பற்றிய தெளிவான அணுகுமுறையையும் பாராட்டி வருகின்றனர். 

Advertisement

Advertisement