• Feb 05 2026

வாழையிலையில் ஹன்சிகா செய்த காரியம்.? மெய்மறந்த ரசிகர்கள்.! வைரல் வீடியோ

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பலமொழிகளிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனிப்பட்ட வாழ்க்கையில்  இடம்பெறும் சின்னச் சின்ன சம்பவங்களையும் பதிவிட்டு வருகின்றார். 

தமிழில் வெளியான மாப்பிள்ளை என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக  அறிமுகமானார் ஹன்சிகா. அந்தப் படத்தை தொடர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி, எங்கேயும் காதல், தீயா வேலை செய்யணும் குமாரு, வேலாயுதம், வாலு, சேட்டை,  அரண்மனை என அடுத்தடுத்து படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். 

2022 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் நண்பர்  சோஹேல் கதூரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . அவர்களுடைய திருமணம் பலரும் வியந்து பார்க்கும் அளவிற்கு அரண்மனை ஒன்றில் நடைபெற்றது. எனினும், அவர் ஹன்சிகாவின் தோழியின் கணவர் என்றும்,  அவர்களுடைய விவாகரத்துக்கு காரணம் ஹன்சிகா தான் என்றும் பேசப்பட்டது. 


இது தொடர்ந்து சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்த திருமண புகைப்படங்கள், தனது கணவருடைய புகைப்படங்கள் என்பவற்றை நீக்கியுள்ளார் ஹன்சிகா. இதனால்  ஹன்சிகா தனது கணவரை  பிரிய உள்ளார் என்ற தகவல் வைரலானது. ஆனாலும் இது தொடர்பில் அதிகாரபூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை. 

இந்த நிலையில், நடிகை ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வாழை இலையில்  சாதம்  வைத்து சாப்பிடுகின்றார். இதை பார்த்த ரசிகர்கள் மெய்மறந்து கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர்.  

Advertisement

Advertisement