• Apr 15 2026

மிஷ்கின் - விஜய் சேதுபதி கூட்டணியில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியானது.!

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி, நுட்பமான கதைகளை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் மிஷ்கின். இசை மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், சமீபத்தில் இசைப் பயிற்சியும் பெற்று  தான் இயக்கிய டெவில் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். 

இதை தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.    இவருடைய இயக்கமும் நடிப்பும்  இவருக்கென  தனி ரசிகர்களை  உருவாக்கியுள்ளது.  

இதை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ட்ரெயின் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை  நடிகை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். மேலும் இந்த பாடலின் வரிகளை கபிலன் இயக்கியுள்ளார். 


கலைப்புலி எஸ். தானு தயாரிப்பில்  உருவாகியுள்ள ட்ரெயின் படத்தின்  ‘கன்னக்குழிக்காரா' பாடல் வெளியாகியுள்ளது.  இந்தப் படத்திற்கும் மிஷ்கினே இசை அமைத்துள்ளாராம்.

இதில் நடிகை டிம்பிள் ஹயாதி, ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ் , பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.


Advertisement

Advertisement