• Feb 05 2026

அதற்குள்ள ஒரு வருஷம் ஆகிடுச்சா..!! ஜாய் கிரிசல்டா சொன்ன குட் நியூஸ்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் மற்றும் சமையல் கலைஞராக திகழும் மாதம் பட்டி ரங்கராஜ்  மற்றும் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசல்ட்டாவின் விவகாரம் சமூக வலைத்தளங்களில் பலரும் அறிந்த ஒன்று.  இவர்களுடைய வழக்கு விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

முதல் மனைவியான ஸ்ருதியை  விவாகரத்து செய்யாமல் இரண்டாவதாக திருமணம் செய்தார்  மாதம்பட்டி ரங்கராஜ். அதற்கு பின் ஜாய் கிரிசல்ட்டா கர்ப்பமானதைத் திறந்து மெல்ல மெல்ல அவரிடம் இருந்து விலகியதை அறிந்த ஜாய்,  சமூக வலைதளங்களில் தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர தொடங்கினார். 

இதை தொடர்ந்து ஜாய் கிரிசல்ட்டாவுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. அப்போது சரி மாதம்பட்டி ரங்கராஜ் இறங்கி வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இந்த குழந்தைக்கு நான்தான் அப்பா என்று டி என் ஏ டெஸ்டில் உறுதியானால் மட்டுமே அந்த குழந்தைக்கான பொறுப்பை ஏற்பேன் என்று முற்றுப்புள்ளி வைத்தார்.


ஆனாலும் இதுவரையில் அவர் டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு செல்லவில்லை என  ஜாய் கிரிசல்ட்டா சமூக வலைத்தளங்களில்  குரல் எழுப்பி வருகின்றார் . எனினும் மாதம்பட்டி ரங்கராஜ் இது தொடர்பில் கவனத்தை காட்டாமல் தனது பிசினஸில்  முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றார். 

இந்த நிலையில், ஜாய் கிரிசல்ட்டா தங்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் முடிந்து விட்டதாக  தனது இன்ஸ்டால பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.  தற்போது அவர் பதிவு வைரலாகி வருகிறது. 


 

Advertisement

Advertisement