• May 21 2024

மஹா திரைப்படம் எப்படி இருக்கு- டுவிட்டரில் விமர்சனங்களை தெறிக்க விட்டு வரும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சிம்பு மற்றும் ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்து இன்றைய தினம் வெளியாகியிருந்த திரைப்படம் தான் மஹா. இப்படத்தை இயக்குநர் யு.ஆர்.ஜமீல் இயக்கியிருந்ததோடு எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரித்துள்ளார்.

கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் ஹன்சிகா லீட் ரோலில் நடித்துள்தோடு சிம்பு, ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமைய்யா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.விமானப் பெண்ணாக வரும் ஹன்சிகா பைலட் ஜமீலாக வரும் சிம்புவை காதலிக்கிறார். இவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தை கொல்லப்படுகிறது. குழந்தையை கொன்றது யார் என்பதை கதாநாயகி ஹன்சிகா கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை.

இப்படம் வெளியாகியதைத் தொடர்ந்து ரசிகர்கள் டுவிட்டரில் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஹன்சிகா படத்தை திரையில் பார்த்த ரசிகர் ஒருவர், மஹா படத்தின் முதல் பாதியில் ஹன்சிகாவின் நடிப்பு நம்பமுடியாத அளவுக்கு உள்ளது. மேலும், இடைவெளியில் பிளாக் ட்விஸ்ட் வேற லெவல் ஃபயர் இரண்டாம் பாதிக்காக காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் ஹன்சிகாவின் 50வது திரைப்படமான மஹா படத்தை திரையில் பார்த்தேன். படம் காலையிலிருந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. மிக்க மகிழ்ச்சி ஹன்சு உங்களைத் திரையில் பார்த்து 4 வருடங்கள் ஆகிறது, இன்று நான் எப்படி என்னைக் கையாள வேண்டும் என்பதை வெளிப்படுத்த முடியாது. மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மஹா படத்தில் முதன்முறையாக அம்மாவாக ஹன்சிகா நடித்து அசத்தி உள்ளார்.படத்தில் நடித்த அனைவருமே தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். மஹா சிறப்பான படமாக உருவாகி உள்ளது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடத்துள்ள சிம்பு 40 நிமிடங்கள் வருகிறார். சிம்பு மற்றும் ஹன்சிகாவின் கெமிஸ்டிரி திரையில் சிறப்பாக வந்துள்ளது என ரசிகர்கள் ட்விட்டரில் தெறிக்கவிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement