• May 10 2024

முக்கிய இயக்குநர்கள் பிள்ளைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டிய அஜித்- அட இவ்வளவு நாளாக இது தெரியாமல் போச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலர் பொதுவாக தம்மை சமூக சேவையில் ஈடுபடுத்திக் கொள்வதை வழமையாக வைத்துள்ளனர். அந்த வகையில் முக்கிய நடிகரான அஜித்தும் சினிமாத்துறையைச் சேர்ந்த பலருக்கும் பல உதவிகளை செய்து வருகின்றனர்.

இதனடிப்படையில் சமீபத்தில் நடிகர் மீசை இராஜேந்திரன் ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். சிறு படங்களுக்கு கலை இயக்குநராக பணிபுரியும் ஒருவரது பிள்ளைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் உடனடியாக 8 லட்சம் தேவைப்பட்டதாம். அதனால் வேறொருவரின் ஆலோசனையின் படி நடிகர் அஜித்தை சந்தித்திருக்கிறார். அதற்கு முன் அவர் படத்தில் வேலை பார்த்ததில்லை என்றாலும் அவரிடம் உதவி கேட்டிருக்கிறார்.

அஜித் அவரிடம் ஒரு பையை கொடுத்து, "இதற்கு மேல் தேவைப்பட்டாலும் கேளுங்கள்" என்று சொல்லி அனுப்பி வைத்தாராம். ஒரு லட்சம் இருக்கும் என நினைத்து பையை திறந்து பார்த்தபோது அதில் முழு 8 லட்சமும் இருந்ததாக இராஜேந்திரன் கூறியுள்ளார்.

மேலும் அஜித் நடிப்பில் அறிமுக இயக்குநர் நந்தா பெரியசாமி என்பவரால் மஹா என்னும் திரைப்படம் எடுக்கப்பட்டது.இதில் அஜித்திற்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு என அந்தப் படம் கைவிடப்பட்டது.

அதன் பின் ஒரு கல்லூரியின் கதை படம் மூலம் இயக்குநராகி, மாத்தியோசி, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார் நந்தா.மஹா படம் கைவிடப்பட்டதும் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் படம் எதுவும் கிடைக்காமல் சிரமப்பட்டிருக்கிறார். அந்தக் காலக்கட்டத்தில் வேறு சில தயாரிப்பு நிறுவனங்களுக்கு கதை சொல்ல அஜித்தே அனுப்பினாராம். அதுமட்டுமின்றி தனது பிள்ளைகள் ஸ்கூல் ஃபீஸையும் அஜித்தான் கட்டினாராம்.

இயக்குநரான பின்பு அந்த உதவியை வேறு யாருக்காவது செய்யுங்கள் என்று கூறியதாக நந்தா பெரியசாமி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இவரைப் போல பரியேறும் பெருமான் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகர் மாரிமுத்து. இவர் ஆசை படத்தில் துணை இயக்குநராக பணியாற்றியதால் அஜித்துடன் நல்ல பழக்கம் இருந்ததாம். அப்போது எல்.கே.ஜி முதல் பத்தாம் வகுப்பு வரை தன் பிள்ளை படிக்கும்போது அஜித்தான் முழு ஸ்கூல் ஃபீஸையும் கட்டினார் என்று மாரிமுத்துவும் ஒரு பேட்டியில் கூறியிருந்ததைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement