• Mar 11 2026

ஈரமான ரோஜாவே 2 சீரியல் காவியா அடுத்த பிளான்... புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கேப்ரியல்லா...

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டிலையும் வென்று இருந்த மிகவும் பரீட்சயமான முகங்களில் ஒருவர் தான் கேப்ரியல்லா. இந்நிகழ்ச்சி கொடுத்த பிரபலம் கடந்த 2012ம் ஆண்டு ஒளிபரப்பான 7சி என்ற சீரியலில் நடித்தார்.


தனுஷின் 3 உட்பட பல படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்ட இவர் ரூ. 5 லட்சத்துடன் வீட்டைவிட்டு வெளியேறினார். அதன்பின் பிபி ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஈரமான ரோஜாவே 2 தொடரில் ஒரு முக்கிய நாயகியாக நடித்து வந்தார், தற்போது தொடரும் முடிவுக்கு வந்துவிட்டது.


ஈரமான ரோஜாவே 2 தொடரை முடித்த கையோடு கேப்ரியல்லா நிறைய ஊர் சுற்றி வந்தார். இந்த நிலையில் தான் நடிகை புதிய தொடரில் கமிட்டாகியுள்ள விஷயம் வெளிவந்துள்ளது.


அதாவது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடரில் நந்தினி, கண்ணே கலைமானே தொடர்களில் ஹீரோவாக நடித்த ராகுல் ரவிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். விரைவில் தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement