• May 19 2026

CM சீட்டுக்கான க்ளூவை GOAT படத்துலவே வச்சிட்டோம்...? விஜய்க்கு கிடைத்த சர்ப்ரைஸ் கிப்ட்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்கத்தில், இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கோட். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

அதிலும் குறிப்பாக பிரபுதேவா, பிரசாத், லைலா, சினேகா, மோகன் மற்றும் விஜய் அப்பா - மகன் கேரக்டரில் நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கூட சிறப்பு தோற்றத்தில் தோன்றி இருந்தார். விமர்சன ரீதியாக கோட் படம் பல நெகட்டிவ் கருத்துக்களை சந்தித்தாலும் இந்த படம் வணிக ரீதியாக வெற்றிப் படம் என கூறப்பட்டது.

இந்த நிலையில் , தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை வெங்கட் பிரபு நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அதற்குக் காரணம், விஜய் நடித்த ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பிரபலமான ‘TN07 CM 2026’ என்ற நம்பர் பிளேட்டை வெங்கட் பிரபு, விஜய்க்கு நேரில் பரிசாக வழங்கியிருப்பதுதான். அந்த படத்தில் விஜய் ஓட்டிய காரில் இந்த நம்பர் பிளேட் இடம்பெற்றிருந்தது. இது அப்போதே பேசு பொருளாக காணப்பட்டது.


இந்த சந்திப்பின் புகைப்படங்களை வெங்கட் பிரபு தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “ஒரு சிந்தனையாக தொடங்கியது, இன்று வரலாறாக மாறியுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அண்ணாவை சந்தித்து GOAT படத்தின் முதல் வெளிப்பாட்டை வழங்கியதில் மகிழ்ச்சி. இது தொடக்கம் மட்டுமே” என்று பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து ‘GOAT’ திரைப்படத்தில் இடம்பெற்ற அந்த காட்சி மீண்டும் இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது. குறிப்பாக, ‘TN07 CM 2026’ என்ற நம்பர் பிளேட்டை ரசிகர்கள் தற்போது வேறு கோணத்தில் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

2024-ஆம் ஆண்டு படம் வெளியான சமயத்தில் இந்த நம்பர் பிளேட் ஒரு சுவாரஸ்யமான விஷயமாக மட்டுமே பேசப்பட்டது. ஆனால் தற்போது விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, ரசிகர்கள் இதை “அரசியல் முன்னறிவிப்பு” போல சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

‘GOAT’ திரைப்படம் விஜய் தனது அரசியல் கட்சியை அறிவித்த சில மாதங்களுக்குப் பிறகு வெளியானது. அதில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். தற்போது அந்த படத்தின் பழைய காட்சிகள் மீண்டும் டிரெண்டாகி வரும் நிலையில், வெங்கட் பிரபுவும், பிரேம்ஜி அமரன் அவர்களும் இணையத்தில் அதற்கு ரியாக்ட் செய்துள்ளனர்.


Advertisement

Advertisement