• May 19 2026

தம்பி விபத்தில் பலி..அம்மாவும் உயிருக்கு போராடுறாங்க! கஞ்சா கருப்பின் கண்ணீர் பேட்டி வைரல்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக திகழ்ந்தவர் கஞ்சா கருப்பு. இவர் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைந்த பிறகு சினிமா துறையில் அதிகம் காணப்படாமல் போனார்.

இந்த நிலையில், நடிகர் கஞ்சா கருப்புவின் சகோதரர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியை கேட்டு அவருடைய தாயாரின் உடல்நிலையும் தற்போது மோசமாக இருப்பதாக கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார்.

அதாவது, கஞ்சா கருப்புவின் சகோதரர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் அன்று அதிகாலை டீ குடிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக வாகனம் ஒன்று மோதியதில் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுதொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற வாகனம் குறித்து இதுவரை அடையாளம் தெரியவில்லை. இதனால் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.


இதுகுறித்து சுருக்கமாக பேசிய நடிகர் கஞ்சா கருப்பு, ''என் தம்பி மீது வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. அந்த வாகனத்தை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த செய்தியை கேட்டு என்னுடைய அம்மாவும் மிகவும் மனமுடைந்து போய்விட்டார். நாளைக்கே கூட எனது அம்மாவும் உயிரிழந்து விடும் அளவுக்கு மிகுந்த துயரத்தில் இருக்காங்க. என்னுடைய அம்மாவின் மனசு சாந்தி அடைவதற்காக இந்த விபத்தை ஏற்படுத்தியது யார் என்பதை கண்டுபிடித்து தண்டனை கொடுக்க வேண்டும்” என முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தற்போது கஞ்சா கருப்பு வழங்கிய இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே தமிழ் திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர் கே. ராஜன் மற்றும் முத்துக்காளையின் மனைவி என அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது கஞ்சா கருப்பு வீட்டிலும் இந்த மரண சம்பவம் இடம்பெற்றுள்ளது பலரையும் கலங்க வைத்துள்ளது.

Advertisement

Advertisement