விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரச்சிதா மகாலட்சுமி. அதன் பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் புகழ்பெற்றார்.
பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமான ரச்சிதா மகாலட்சுமிக்கு, பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்த சீரியலாக சரவணன் மீனாட்சி சீரியல் காணப்படுகின்றது. அதன் பின்பு நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் நடித்தார். ஆனாலும் அந்த சீரியலில் பாதியிலேயே விலகி இருந்தார்.
d_i_a
பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடிக்கும் போது அதில் அவருக்கு ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவருடைய திருமண வாழ்க்கை நீடிக்க வில்லை. கிட்டத்தட்ட ஒன்aபது ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. மீண்டும் இவர்கள் ஒன்று சேர்வார்கள் என பல ரசிகர்கள் எதிர் பார்த்த போதும் அவர்கள் இருவரும் தங்களுடைய முடிவில் உறுதியாக உள்ளனர்.
இதைத்தொடர்ந்து நடிகை ரச்சிதா மகாலட்சுமி தனது சினிமா கேரியேரில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றார். தமிழில் மட்டும் இல்லாமல் கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகின்றார். சமீபத்தில் பிக் பாஸ் பிரபலங்களின் நடிப்பில் வெளியான பயர் படத்தில் ரச்சிதா மகாலட்சுமியும் நடித்திருப்பார்.
இந்த நிலையில், ரச்சிதா மகாலட்சுமி வழங்கிய பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் கூறுகையில், கூத்தாடியாக இருப்பதற்கு நாங்கள் பெருமைப்படுகின்றோம். நாங்கள் கூத்தாடியாகவே இருப்போம்.. ஏனென்றால் அது மிகப்பெரிய ஒரு நல்ல வார்த்தை.. அதை தேவையில்லாதவர்கள் தான் தப்பாக ஆக்கினார்கள்.. ஆனால் கூத்தாடி என்பது ஒரு நல்ல வார்த்தை.. நாங்கள் பெருமைப்படுவோம்.. நாங்கள் கூத்தாடியாகவே இருப்போம்.. நாங்கள் கூத்தாடியாகவே ஜெபிப்போம்.. என்று ரச்சிதா மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
Listen News!