சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் வெற்றி வசந்த். தனது இயல்பான நடிப்பால் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார். குறிப்பாக இந்த சீரியல் மூலம் குடும்ப ரசிகர்களிடமும் பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவரது தனிப்பட்ட வாழ்க்கையும் ரசிகர்களிடையே எப்போதும் கவனத்தை ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. கடந்த 2024ஆம் ஆண்டு, சீரியல் நடிகையான வைஷ்ணவியுடன் வெற்றி வசந்திற்கு திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்களும், வீடியோக்களும் அப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில், சமீபத்தில் வெற்றி வசந்த் தனது பிறந்தநாளை கொண்டாடிய விதம் ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது. தனது பிறந்தநாளை “சிறகடிக்க ஆசை” சீரியல் குழுவினருடன் சேர்ந்து அவர் சிறப்பாகக் கொண்டாடியுள்ளார். கேக் வெட்டி, சக நடிகர்கள் மற்றும் நண்பர்களுடன் சந்தோஷமாக கொண்டாடிய தருணங்கள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வீடியோ வெளியானவுடன் ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது. பலரும் “ஹேப்பி பர்த்டே” என்று வாழ்த்துகளை தெரிவித்து வருவதோடு, அவரது எளிமையான கொண்டாட்டத்தையும் பாராட்டி வருகின்றனர்.
Listen News!