• Apr 20 2026

தீபாவளி ரேஸில் குதித்த கார்த்தி! - பிரம்மாண்டமாக உருவாகும் 'மார்ஷல்' பட அப்டேட்

shali / 4 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி தற்போது நடித்துவரும் புதிய படம் 'மார்ஷல்' குறித்து வெளியான தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


 “டாணாக்காரன்” படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம், வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1960-களின் பின்னணியில், ராமேஸ்வரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படம் ஒரு பீரியட் ஆக்‌ஷன் கதையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தின் அரசியல், சமூக சூழல் மற்றும் மனித உணர்வுகளை இணைத்து, விறுவிறுப்பான கதைக்களத்தில் படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால், இந்த படத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அத்துடன், இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து சத்யராஜ், பிரபு, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் நட்சத்திர பட்டாளம் ரசிகர்களை மேலும் கவர்ந்துள்ளது.

தற்போது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மாண்டமான செட் அமைப்புகள் மற்றும் காலகட்டத்தை பிரதிபலிக்கும் காட்சிகள் மிகவும் கவனமாக உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த படம் தமிழ் மட்டுமின்றி, மேலும் நான்கு மொழிகளில் வெளியாகும் பான்-இந்தியா திரைப்படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், கார்த்தியின் மார்க்கெட் மேலும் விரிவடையும் என சினிமா வட்டாரங்கள் கணிக்கின்றன.


Advertisement

Advertisement