• Jan 19 2025

விஜய் சொன்ன குட்டிக் கதை இவரிடமிருந்து தான் காப்பியடிக்கப்பட்டதா?- புரளியைக் கிளப்பி விட்ட ப்ளூ சட்டை மாறன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகிய  திரைப்படம் தான் லியோ. குறிப்பாக ஒரே வாரத்தில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த இத்திரைப்படம் தொடர்ந்து வெற்றிநடைபோட்டு வருகிறது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக கடந்த நவம்பர் 1-ந் தேதி சக்சஸ் மீட் நடத்தப்பட்டது. 

இந்த வெற்றி விழாவில் நடிகர் விஜய், நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித், இயக்குநர் கௌதம்மேனன், மிஷ்கின் என படக்குழுவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த சக்சஸ் மீட்டில் விஜய் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது.


அதிலும் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி ரசிகர்களிடையே பேச்சு பொருளாகியுள்ளது. அதாவது காட்டுக்கு வேட்டைக்கு போகும் வேடர்கள் இருவரில் ஒருவர் முயலை வேட்டையாடி முதலில் வந்ததாகவும் இன்னொரு யானைக்கு குறிவைத்து அதனை பிடிக்க முடியாமல் தோல்வியுடன் திரும்பியதாகவும் கூறி, இதில் முயலை வேட்டையாடியவரை விட யானையை வேட்டையாட நினைத்தவரே வெற்றிபெற்றவர் என்று கூறிய விஜய், எப்போதுமே அவரைப்போல் நம்முடைய இலக்கை பெரிதாக வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

நடிகர் விஜய் சொன்ன இந்த கதையை தான் 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே சொல்லிவிட்டதாக கூறி உள்ள ப்ளூ சட்டை மாறன், விமர்சித்துள்ளார்."கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது" என்கிற திருக்குறளை மையமாக வைத்து தான் விஜய் அந்த கதையை சொன்னதாகவும், இதை உங்க கதைனு சொல்றீங்களே நீங்க எப்போ சார் திருவள்ளுவர் ஆனீங்க என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement