• Sep 13 2024

ஹாவோ ஹாவோ காவோ காவோ... மேகி விற்பனையாளரான லியோ ஜனனி... டுவிட்டரில் வைரலாகும் வீடியோ...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் அவர்களின் லியோ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா திரையுலகிற்கு  அறிமுகமானவர் இலங்கை பெண் ஜனனி. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பிறகு ஓரளவு பேமஸ் ஆனா இவர் லியோவில் நடித்ததன் மூலம் நிறைய ரசிகர்கள் உருவாக்கி கொண்டார். இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் லியோ ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட காமெடியான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.    


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் வெற்றி பெற்றதை முன்னிட்டு சமீபத்தில் லியோ வெற்றி விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. லியோ படத்தின் நாயகன் நடிகை விஜய் நடிகை திரிஷா, அர்ஜுன் ,லோகேஷ் உட்பட பட குழுவினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். 


இந்நிலையில் பிக் பாஸ் ஜனனி அவர்களும் லியோ திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். அதனை அடுத்து  விஜய் ரசிகர்கள் உட்பட பார்வையாளர்களும் ஜனனி ரசிகர் ஆனார்கள். லியோ சக்ஸஸ் மீட் முடிந்த பிறகு லியோ தொடர்பான படங்களை ஜனனி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். 


இந்நிலையில் அவர் தற்போது  லியோ படப்பிடிப்பின் போது ஹாவோ ஹாவோ காவோ காவோ என தான் மேகி விற்பது போன்ற காமெடியான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  


Advertisement

Advertisement