• Jan 18 2025

சீரியல் விட்டு விலகும் சின்னத்திரை நடிகை... அன்பேவா சீரியலில் நடந்த சோகம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் அன்பேவா. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறார்கள். தற்போது அந்த தொடரின் கதாநாயகி பூமிகா சீரியலை விட்டு விலக போவதாக ஒரு பரபரப்பு செய்தி வெளிவந்துள்ளது.  


சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக சின்னத்திரை சீரியல் கதாநாயகிகளும் தற்போதைய காலகட்டத்தில் பிரபலமாகி வருகிறார்கள். குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்களில் வரும் நாயகிகள் மிக விரைவில் லட்சக்கணக்கில் ரசிகர்களை சமூக வலைதளங்களில் பெற்றுவிடுகிறார்கள்.


அந்த வகையில் சன் டிவியில் அன்பே வா தொடரின் மூலம் பாப்புலர் ஆனவர் டெல்னா டேவிஸ். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. சன் டிவியில் 900 எபிசோடுகளை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது அன்பே வா சீரியல். நல்ல ரேட்டிங் கிடைத்து வரும் அந்த தொடருக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது.

அன்பே வா தொடரில் தற்போது ஹீரோயின் பூமிகா கதாப்பாத்திரம் இறந்து விடுவது போல காட்டப்பட்டிருக்கிறது. இது அந்த சீரியல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.அதனால் இனி நடிகை டெல்னா அன்பே வா தொடரில் நடிக்க மாட்டார் என்பதும் ரசிகர்களுக்கு தெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.


மீண்டும் இவர் அன்பேவா தொடரில் வருவாரா அல்லது அப்படியே கதை தொடரப்படுமா என்று பொறுத்திருந்து தெரிந்துகொள்வோம்.


 

Advertisement

Advertisement