• Sep 19 2024

காத்து வாக்குல ரெண்டு காதல் படம் தமிழக வசூல் விவரம்- எத்தனை கோடி தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியான திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.

இப்படத்தில் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய மூவரும் இணைந்து நடித்துள்ளனர்.

பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் இப்படமும் பலரிடமும் நல்ல விமர்சனங்கள் பெற்றுவருகின்றது.

முதல் நாளில் சென்னையில் இப்படம் ரூ. 66 லட்சமும், தமிழகத்தில் ரூ. 5 கோடி வரை வசூலித்த இப்படம் அடுத்தடுத்த நாட்களில் நல்ல வசூல் வேட்டை தான் நடத்தி வருகின்றது.

மேலும் 4 நாள் முடிவில் படம் ரூ. 20 கோடிக்கும் மேலாக தமிழகத்தில் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

படம் அமோகமாக ஓடிக் கொண்டிருக்க நேற்று சென்னையில் உள்ள தேவி திரையரங்கில் காத்து வாக்குல ரெண்டு காதல் படக்குழுவினர் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்துள்ளனர்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement