தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், தற்போது தனது திரைப்பயணத்தில் புதிய முயற்சியாக ‘மகுடம்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுக்கவுள்ளார். வழக்கமான ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமல்லாமல், இந்த படத்தில் இயக்குநராகவும் பொறுப்பேற்றிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் ‘மகுடம்’ திரைப்படம் தொடங்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக முக்கிய திருப்பத்தை சந்தித்தது.
அதனைத் தொடர்ந்து, படத்தின் இயக்கப் பொறுப்பை நடிகர் விஷாலே ஏற்றுக்கொண்டார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த தீபாவளி அன்று வெளியிட்ட அவர், படத்தின் போஸ்டரில் “கதை – ரவி அரசு, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் – விஷால்” என்று குறிப்பிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதற்கிடையில், ‘மகுடம்’ திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் தொடர்ந்து 17 இரவுகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகள் படத்தின் மிக முக்கியமான பகுதியாக இருக்கும் எனவும், அதற்காக படக்குழு கடுமையாக உழைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் அந்த கிளைமேக்ஸ் காட்சிகளின் மேக்கிங் வீடியோவை விஷால் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான ஆர்வத்தையும் அதிகரித்தது.
மேலும், கோடை விடுமுறையை முன்னிட்டு ‘மகுடம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘மகுடம்’ திரைப்படத்தின் டீசர் வரும் ஜூன் 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் தனது திறமையை நிரூபிக்க விஷால் எடுத்து வைத்துள்ள இந்த முயற்சி வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. டீசர் வெளியீட்டுக்குப் பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் உயரும் என திரையுலக வட்டாரங்கள் கருதுகின்றன.
And finally my official directorial debut, Nurtured this dream for more than 30 years
to come true,
Supa excited to finally unveil what we've been working on!!
Will be presenting the Teaser of #Magudam/#Makutam on 10th June, God Bless#DirectorVishal #SGF99 #Vishal35 pic.twitter.com/n3AezuYerC
Listen News!