• Jun 26 2024

தெலுங்கில் அறிமுகமாகும் விஷால் பட நடிகை..! வெளியானது சிறப்பு போஸ்டர்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் பிரபல நடிகையாக திகழ்பவர் தான் நடிகர் தர்ஷனா ராஜேந்திரன். இவர் தனது நடிப்பின் மூலம் ரசிகர் மத்தியில் பெரும் பிரபலமானார்.

இவர் ஹிருதயம், இருள், வைரஸ், ஜெய ஜெய ஜெய ஜெய ஹே உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்து பெரும்பான்மையான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திருந்தார்.

இவர் நடிப்பில் வெளியான ஹிருதயம் திரைப்படம் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதில் அவருடைய நடிப்பு மிகவும் பேசப்பட்டது.

ஹிருதயம் படத்தில் வெற்றி தான் தர்ஷனாவின் மார்க்கெட்டை  மிகப்பெரிய அளவில் உயர்த்தியது. அதற்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்த கவண் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.


அதேபோல விஷால் நடித்த இரும்புத்திரை படத்தில் விஷாலுக்கு தங்கையாக நடித்திருப்பார். இதை தொடர்ந்து தமிழில் இன்னொரு படத்திலும் நடிக்கின்றார் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில், தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் தர்ஷனா  நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் அவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகின்றார் . அமிஷ்தா என்ற கேரக்டரில் அவர் நடித்த படத்திற்கு  பரதா என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த படத்தை பிரவீன் கந்த்ரேகுலா இயக்குகின்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹிமாச்சல், ஐதராபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement