சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் வெற்றிக்காக இசையமைப்பாளர் அனிருத் கோவிலில் வழிபாடு நடத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் இசை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. இதனால், திரைப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெற்றிபெற வேண்டி அனிருத் நேற்று இரவு திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
அங்கு முதலில் சம்பந்த விநாயகர் சன்னதியில் வழிபாடு நடத்திய அவர், தொடர்ந்து அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மன் சன்னதிகளில் நடைபெற்ற அபிஷேக வழிபாட்டிலும் கலந்துகொண்டு தரிசனம் செய்துள்ளார். இதன்போது கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்குப் பிரசாதமும் வழங்கப்பட்டுள்ளது.
Listen News!