சினிமா துறையில் இருக்கும் நடிகர்களில் பலர் தங்களது தனிப்பட்ட திறமை, அல்லது கல்வி என்பனவற்றில் சாதித்து வருகின்றனர். கமலஹாசன், ஷாருக்கான் முதல் சாய் பல்லவி, ராம் சரண் வரை பல நடிகர்கள் வைத்தியராகவும் இருக்கிறார்கள். அப்படி சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகருக்கு டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது.
இன்று சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15 – வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 5 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் பிரபல இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்ட எஸ்.ஜெ.சூர்யாவுக்கு 25 வருடங்களாக திரைத்துறைக்கு ஆற்றிய பணிகளை பாராட்டி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Actor, Producer, Director @iam_SJSuryah receiving Honorary Doctorate 👏🏼
— Karthik Ravivarma (@Karthikravivarm) December 1, 2024
pic.twitter.com/6J67NT5x43
Listen News!