• Dec 12 2024

நாக சைதன்யாவின் புதிய இளவரசி வெளியிட்ட வைரல் போட்டோஸ்! அட்டகாசமா இருக்கே..!!

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

நாக சைதன்யாவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட சோபிதா துலிபாலா ஆந்திராவை பூர்விகமாக கொண்டவர். இவர்களுடைய திருமணம் ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சோபிதாவின் திருமணத்தின் போது அவர் அணிந்த நகைகள், ஆடைகள் என்பன கடந்த ஒரு வாரங்களை கடந்தும் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அவருடைய  நகைகள் தனித்தன்மை வாய்ந்த பாரம்பரியமானதாகவும் காணப்படுகின்றன.

d_i_a

மேலும் சோபிதா திருமணத்தின் போது அணிந்து கொண்ட நகைகள் பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா அணிந்திருந்த நகைகளை போலவே இருப்பதாக பலர் கமென்ட் பண்ணினார்கள். 


ஆனால் அந்த நகைகளை பிரபல நிறுவனம் ஒன்று தயாரித்ததாகவும், அதனை பார்க்கும் போதே சோபிதா ஆச்சரியப்பட்டார் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், திருமணத்திற்கு பிறகு முதன்முதலாக தனியாக போட்டோ ஷுட் எடுத்துக் கொண்டுள்ளார் சோபிதா துலிபாலா. குறித்த புகைப்படங்களில் சோபிதா இளவரசி போல் காணப்படுகின்றார். இதை பார்த்தா ரசிகர்கள் அவருடைய ஆடையையும் அணிகலன்களையும் உற்று நோக்கி வருகின்றார்கள்.. இதோ அந்த புகைப்படங்கள்..

Advertisement

Advertisement