• Dec 12 2024

மணிகண்டனின் "குடும்பஸ்தன்"...! எப்போது ரிலீஸ் தெரியுமா? அப்டேட் இதோ...

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

நடிகர் மணிகண்டனின் அடுத்த புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாக உள்ளதாக இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது மணிகண்டனின் "குடும்பஸ்தன்" திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை  முக்கிய பிரபலம் வெளியிடவுள்ளதாக அப்டேட் நியூஸ் வலம்வருகிறது. 


ஜெய் பீம்' என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் நடிகர் மணிகண்டன். அதனை தொடர்ந்து கதாநாயகனாக லவ்வர், குட் நைட் போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். நடிகராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களுக்கு கதை, வசனமும் எழுதியுள்ளார். இவரின் எதார்த்தமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். 


இவர் தற்போது 'நித்தம் ஒரு வானம்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை நக்கலைட்ஸ் யூடியூப் சேனலின் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். 


இந்த படத்திற்கு 'குடும்பஸ்தன்' என பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டார். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை பிரபல நடிகர் துல்கர் சல்மான் வெளியிட உள்ளார். இந்த பாடல் நாளை வெளியாக உள்ள நிலையிலே இது தொடர்பான போஸ்ட்டர் தான் தற்போது வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement