• Mar 11 2026

பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட்காட் என்ட்ரியாக வரவிருந்த வினுஷா- இதனால தான் வரலையா?- நல்ல வேளை நிக்சன் தப்பிச்சிட்டாரே..

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் வார வாரம் பல சர்ச்சைகளின் மத்தியில் ஒளிபரப்பாகி வருகின்றது.சென்னையில் பெய்த மழை வெள்ளத்தின் காரணமாக இந்த வாரம் எவிக்ஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த வாரம் வினுஷாவை நிக்சன் உருவகேலி செய்த விஷயத்தை மீண்டும் கொண்டுவந்து அவரை வெளுத்து வாங்கி உள்ளார் அர்ச்சனா.

 வினுஷா பிக்பாஸில் வீட்டில் இருக்கும் போது அவரை நிக்சன் உருவகேலி செய்து பேசியது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது.வினுஷா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்ற பின்னர் இந்த விஷயம் பெரிதானதால் அவர் பேட்டிகளில் நிக்சன் மீதான அதிருப்தியை தெரிவித்ததோடு, அவனை மன்னிக்கவே மாட்டேன் என்றும் கூறி இருந்தார். 


இந்த விஷயத்தை வைல்டு கார்டு போட்டியாளர்களாக வந்த அனன்யா ராவ் மற்றும் விஜய் வர்மா இருவரும் நிக்சன் காதுக்கு கொண்டு போக, உடனே அவர் வெளியே சென்றதும் வினுஷா காலில் விழுந்து மன்னிப்பு கேட்பேன் என கூறினார். இந்த நிலையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வினுஜா வைல்ட் காட் என்ட்ரியாக இந்த நிகழ்ச்சிக்குள் நுழைய வேண்டும் என்று இருந்தாராம்.


ஆனால் உடல் சுகயீனம் காரணமாகத் தான் வைல்ட் காட் என்ட்ரியாக நுழைய முடியாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் வைல்ட் காட் என்ட்ரியாக நுழைந்திருந்தால் நிக்சனின் ரியாக்சன் என்னவாக இருந்திருக்கும் என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement