• Oct 31 2024

பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றிய பவர் ஸ்டார்- அதிரடியாக பிடிவாரண்ட் பிறப்பித்த போலீஸார்

stella / 10 months ago

Advertisement

Listen News!

2011 ஆம் ஆண்டு லத்திகா எனும் படத்தை இயக்கி தயாரித்தவர் பவர்ஸ்டார் சீனிவாசன். அந்த படத்தில் இவர் ஹீரோவாகவே அறிமுகானார். ஹீரோவாக திரையில் தோன்றினாலும் அவரை காமெடியனாகவே மக்கள் ஏற்றனர். 

சந்தானம் நடிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானம், பவர்ஸ்டாரை கலாய்க்கும் விதத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இதன் மூலம்தான் பவர்ஸ்டார் பேமஸ் ஆனார் என சொல்லலாம்.தொடர்ந்து இன்னும் சில படங்களில் கமிட்டாகி நடித்திருந்தார்.


இவர் ராமநாதபுரம் மாவட்டம் தேவி பட்டிணத்தை சேர்ந்த முனியசாமி என்பவருக்கு ரூ.15 கோடி லோன் வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சத்தை அட்வான்ஸ் தொகையாக பெற்றுக் கொண்டுள்ளார். 

ஆனால், கடனும் வாங்கி கொடுக்காமல் பெற்று கொண்ட ரூ.14 லட்சத்தையும் திருப்பி கொடுக்காததால் முனியசாமி ராமநாதபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு நீதிமன்றத்தில் பல முறை விசாரணைக்கு வந்தும் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆஜராகாததால் இன்று நடுவர் நீதிமன்ற நீதிபதி பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். 


இந்த பிடிவாரண்ட் சென்னை, அண்ணா நகர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 2-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.



Advertisement