• Nov 22 2024

பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய விக்ரம்! எத்தனை லட்சம் நிதியுதவி தெரியுமா?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

கேரள மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாகவே பருவ மழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் வயநாடு, கோழிக்காடு, மலப்புரம் போன்ற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரையில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தும் மக்கள் பலர் அதற்கு புதைந்தும் மண்ணுக்குள் சிக்கியும் உள்ளார்கள். இவர்களை காப்பாற்ற கடந்த  இரண்டு நாட்களாக மீட்பு பணியினர் இரவு பகல் பாராமல் போராடி வருகின்றார்கள்.

மேலும் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றார்கள்.


அத்துடன் தளபதி விஜய், கமலஹாசன், ஜிவி பிரகாஷ் போன்ற பிரபலங்கள் கேரள மக்களின் நிலையைக் கண்டு சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

இந்த நிலையில், நடிகர் விக்ரம் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 20 லட்சம் ரூபாயை தனது சொந்த நிதியில் இருந்து கேரளா முதல்வரின் மீட்பு பணிக்கு வழங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement