திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தி மறைந்த நடிகர் மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் இன்று (17 ஜனவரி). அவரது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் மற்றும் த.வெ.க தலைவர் விஜய் சமூக வலைத்தளங்களில் அதிரடி வாழ்த்து பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

விஜய் தனது வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக மக்களின் நெஞ்சங்களில் பொன்மனச் செம்மலாக, ஏழை, எளியோருக்கான நலத்திட்டங்களின் நாயகராக, பேரறிஞர் அண்ணா அவர்களின் ஜனநாயகப் பாதையில், சாமானியர்களுக்கும் அதிகாரமளித்து, மக்களாட்சி செய்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாளில், அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.” என்று கூறியுள்ளார்.
இந்த வாழ்த்து பதிவின் மூலம், விஜய் எம்.ஜி.ஆரின் அரசியல் சேவைகளையும், சமூக நலத்திட்டங்களையும் பாராட்டியுள்ளார். அவரது வார்த்தைகள், ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து, இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!