• Mar 13 2026

நலன் குமாரசாமி சொன்னா.? உனக்கு எங்கடா போச்சு அறிவு.! கார்த்தியை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

shali / 1 month ago

Advertisement

Listen News!

நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் ‘வா வாத்தியார்’. பல ஆண்டுகளுக்குப் பிறகு நலன் குமாரசாமி இயக்கிய படம் என்பதால், இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. கார்த்தி, க்ரித்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் தற்போது திரையரங்குகளில் ஓடி வருகிறது.


இந்த நிலையில், இப்படம் குறித்து பிரபல திரைப்பட விமர்சகரும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு வருபவருமான ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். வழக்கம்போல், அவரது விமர்சனம் இந்த முறையும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

‘வா வாத்தியார்’ திரைப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 


அந்த பதிவில் அவர், “ஏன்டா.. ஒனக்கு என்ன கொழுப்பு இருந்தா என்னை மாதிரி நடிச்சி.. அந்த படத்தை ஃப்ளாப் வேற பண்ணுவ?.. நீங்க எம்.ஜி.ஆர் மாதிரி தகதகன்னு மின்னுறீங்கன்னு அந்த நலன் குமாரசாமி பயதாங்க என்னை கோத்து விட்டான்.. அவன் சொன்னா.. உனக்கு எங்கடா போச்சி அறிவு?” என கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி, கார்த்தியை நேரடியாக தாக்கியுள்ளார்.

இந்த விமர்சனத்துடன் சேர்த்து, ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் தான் தற்போது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த புகைப்படத்தில், எம்.ஜி.ஆர் கார்த்தியை அடிப்பது போல வடிவமைக்கப்பட்ட ஒரு கலாய்ப்பு படம் வெளியிடப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement