• Jan 20 2025

நேரில் தேடிச்சென்று கதை சொன்ன விஜயின் மகன்... நடிக்க முடியாதுனு அதிர்ச்சி கொடுத்த சூரி

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், சினிமா இயக்கம் தொடர்பான படிப்பை லண்டனில் படித்து விட்டு இந்தியா திரும்பி தன்னுடைய கதையை லைக்கா நிறுவனத்திடம் கூறியதோடு தயாரிப்பாளரையும் பிடித்துவிட்டார்.

தன்னுடைய கதையை மேலும் வலுவூட்டுவதாக சில மாதங்கள் எடுத்துக்கொண்ட சஞ்சய், தற்போது அதை முழுமைப்படுத்தி விட்டு தன்னுடைய படத்திற்கு ஏற்ற மாதிரி ஒரு ஹீரோவை தேடுவதில் மும்முரம் காட்டி வருகின்றார்.

ஏற்கனவே வெளியான தகவல்களின்படி கவின், விஜய் சேதுபதி, விக்ரமின் மகன் துருவ் ஆகியோர்கள் இவரின் லிஸ்டில் உள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் சூரியை சந்தித்து தன்னுடைய கதையை கூறியுள்ளாராம் விஜயின் மகன் சஞ்சய்.


அதன்படி, அவரின் படத்தின் கதையை ஒரு மணி நேரமாக பொறுமையாக கேட்ட சூரி, தம்பி உங்க கதை ரொம்ப நல்லா இருக்கு. கண்டிப்பா நீங்கள் சொன்னதை எடுத்தால் படம் சூப்பர் ஹிட் அடிக்கும். ஆனால் இது போன்ற ஒரு மாஸ் கதையில் நான் ஹீரோவாக நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதற்கு நான் பொருத்தம் இல்லை எனக் கூறி அதிர்ச்சி கொடுத்து விட்டாராம்.

அதற்கு காரணம் தனக்கு ஏற்ற கேரக்டரை தேர்வு செய்து நடிப்பதே தான் சிறந்தது என்றும், பறந்து பறந்து சண்டை போடுவது.. ஒரே நேரத்தில் 20 பேரை அடிப்பது என மாஸ் கதை என்றால் அதில் சூரி நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை அறிந்துதான் சூரி இப்படி கூறியுள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு நம்பி சென்ற சூரியும் பின்வாங்கியதால் மீண்டும் தன்னுடைய படத்திற்கு ஏற்ற ஹீரோவை தேடுவதில் சஞ்சய் ஆர்வம் காட்டி வருகின்றார்.

Advertisement

Advertisement