• Oct 13 2024

விஜயாவுக்கு ரோகிணி வச்ச செக்.. மனோஜ் வாயை அடக்கிய ஸ்ருதி! முத்து எடுத்த முடிவு

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், விஜயா ரோகினியை நீயும் வெளிநாட்டில் தான் இருந்து வந்தா, உன்ன நாங்க சந்தேகப்பட்டோமா? எனக் கேட்க, இவர்களை இப்படி கேள்வி கேட்க விடக்கூடாது என மனோஜ் லிவிங்ல இருந்தது உண்மைதானே அப்படி இல்லை என்றால் நான் மன்னிப்பு கேட்கின்றேன் என விஜயா மனோஜை ஆப் ஆக்கி அனுப்புகின்றார்.

இதனால் மனோஜ், விஜயா எதுவும் பேசாமல் வெளியே வந்து விட, ஏன் நீங்க ஒண்ணுமே கேட்கல என்று மனோஜ் கேட்கவும், எல்லாம் உன்னால தான் நீ செஞ்ச பாவம் எல்லாம் இப்பதான் உன்னை விரட்டுது என விஜயா மனோஜ்ஜை திட்டுகின்றார்.

அதன் பின்பு முத்து தனது நண்பர் கொடுத்ததாக கட்டில் ஒன்றை வாங்கிட்டு வர அதனை விஜயாவும் மனோஜூம் வழமை போல கேலி பண்ணுகிறார்கள். மேலும் இங்கு ஹாலில் போட இடமாய் இருக்கு என ரோகிணி பேசுகின்றார்.

அதன்பின்பு அங்கு வந்த ஸ்ருதி கட்டிலின் மேல் ஏறி குதித்து விளையாடிக் கொண்டிருக்க அங்கு வந்த விஜயாவிடம் இந்த கட்டில் நல்ல கட்டில் காலா காலத்துக்கு பாவிக்கலாம் என கட்டிலை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்க, மனோஜ் அங்கு வந்து இது டூப்ளிகேட்டா கூட இருக்கலாம் என்று சொல்ல, இது தேக்கு மரக்கட்டில் இது கூட உங்களுக்கு தெரியலையா என்ன ஷோரூம் நடத்துறீங்க என மனோஜை நோண்டி ஆக்குகின்றார் ஸ்ருதி.


இதை தொடர்ந்து முத்து தமது ஹோட்டலில் தம்பதிகளுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும் அதற்கு மூன்று ஃபார்ம் வாங்கி விட்டதாகவும் ரோகிணி இடமும் முத்து விடவும் கொடுக்கின்றார்.

ஆரம்பத்தில் முத்து இதற்காக நேரம் எல்லாம் செலவழிக்க முடியாது என்று சொல்ல, ரோகிணி உங்களுக்கு பயமா என கேட்கின்றார். அதன் பின்பு ரவி இதில் கலந்து கொள்பவர்களுக்கு  அவோட்டும்  ஒரு லட்சம் ரூபாய் காசும்  கொடுப்பதாக சொல்ல தாமும்  கலந்து கொள்வதாக முத்து சொல்கின்றார்.  இதான் இன்றைய எபிசோட்.


Advertisement