• Oct 05 2024

அடிங்கடா விசில..!! விஜய் பாடிய செகண்ட் சாங் ரிலீஸ்.. இது தான் பர்த்டே பரிசா? மாஸ் அப்டேட்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முன்னணி நட்சத்திரங்களான பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மோகன், அஜ்மல், லைலா, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் என்டர்டெயினெமெண்ட் தயாரித்துள்ளது. மேலும் இதில் டீஏஜீங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளார்களாம் படக்  குழுவினர்.

கோட் படத்தின் ஷூட்டிங்ஸ் சென்னை, ஹைதராபாத், தாய்லாந்து, மாஸ்கோ மற்றும் இலங்கை, இஸ்தான்புல் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ஷூட்டிங்காக மோகன் இலங்கைக்கு சென்று புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.


இந்த நிலையில், நடிகர் விஜய் தனது ஐம்பதாவது பிறந்தநாளை நாளைய தினம் கொண்டாட  இருக்கும் நிலையில், கோட் படத்தின் இரண்டாவது பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என தற்போது போஸ்டர் மூலம் தகவலை வெளியிட்டு உள்ளார்கள்.

குறித்த பாடல் விஜயின் இரண்டாவது பாடலாக இருக்கும் என்பதோடு குறித்த போஸ்டரில் 'சின்ன சின்ன கண்கள்' என்ற கேப்சன் போட்டு வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement