• Jan 19 2025

பிரபல நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் ராஜேந்திர பிரசாத்தின் மகள் காயத்ரி இளம் வயதில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இவருடைய மறைவுக்கு பலரும் தமது  இரங்களை தெரிவித்து வருகின்றார்கள்.

ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் காயத்ரி நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இவ்வாறான நிலையில் 38 வயதான காயத்ரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மறைந்த காயத்ரி காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரிடம் ராஜேந்திர பிரசாத் பேசாமலே இருந்து வந்துள்ளார். அதன் பின்னரே மனமாறி சமீபத்தில் காயத்ரியை ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகின்றது.

தற்போது இளம் வயதில் உயிரிழந்த அவருடைய  மகளுக்கு, நானி ஜீனியர் என்டிஆர் உள்ளிட்ட தெலுங்கு பிரபலங்கள் பலர் தமது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.  

Advertisement

Advertisement