• Jan 19 2025

சிவகார்த்திகேயனுக்கு துப்பாக்கி மட்டுமில்ல காஸ்ட்லி கிப்ட் ஒன்றையும் கொடுத்த தளபதி! BTS வீடியோ

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக காணப்படுபவர் தான் இளைய தளபதி விஜய். இவர் இறுதியாக கோட் படத்தில் நடித்திருப்பார். இதை  தொடர்ந்து தளபதி 69ஆவது படத்திற்கான  பூஜை நேற்றைய தினம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் காணப்படுபவர் தான் விஜய். ஆனால் இவர் தளபதி 69 படத்துடன் சினிமா துறையில் இருந்து விலகி முழு நேரமாக அரசியலில் பயணிக்க உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவரான விஜய், மக்களுக்கு நல்ல செயல்களை செய்வதற்காகவே சினிமாவிலிருந்து விலக உள்ளார். ஆனாலும் இது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் வேதனையை கொடுத்தாலும் அவருடைய கட்சியிலேயே தொண்டர்களாக மாறி அவருக்கு பணி புரிய காத்துள்ளார்கள்.

கோட் படத்தில் வெங்கட் பிரபு முன்னணி நட்சத்திரங்கள் பலரையும் நடிக்க வைத்ததோடு அதில் கேமியா ரோலில் சிவகார்த்திகேயன், திரிஷா ஆகியோரை நடிக்க வைத்திருப்பார். அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் தன்னுடைய பொறுப்பை சிவகார்த்திகேயனிடம் ஒப்படைப்பது போல காட்சி அமைந்திருக்கும். ஏற்கனவே அடுத்த தளபதி யார் என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது சிவகார்த்திகேயன் தான் என்று அவருடைய ரசிகர்கள் ஆர்ப்பரித்து வந்தார்கள்.


அதுபோலவே கோட் படத்தில் விஜயே தனது பொறுப்பை சிவகார்த்திகேயனிடம் ஒப்படைத்து அதை நிரூபித்து விட்டார். இதை தொடர்ந்து பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் சிவகார்த்திகேயன் வழங்கிய பேட்டி ஒன்றில், தளபதி தளபதி தான். தல தல தான். சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான். அவர்களுடைய இடத்தை யாரும் நிரப்ப முடியாது என பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் கோட் படத்தில் கேமியா ரோலில் நடித்த போது எடுக்கப்பட்ட BTS காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனமான  ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் வீடியோவாக வெளியிட்டு உள்ளது. மேலும் விஜய் சிவகார்த்திகேயனுக்கு வாட்ச் ஒன்றையும் பரிசளித்துள்ளார். இந்த விடயமும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Advertisement

Advertisement