• Aug 26 2026

பாகுபலியை மிஞ்சும் படைப்பு... STR48 இயக்குனர் சொன்ன கதை... கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

சிம்பு தற்போது தக் லைப் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.  இப்படத்திற்கு பின்னர் சிம்பு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி உடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக எஸ் டி ஆர் 48 என்று தலைப்பு வைத்துள்ளனர்.


இந்த நிலையில் தங்கலான் படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய எஸ் எஸ்  மூர்த்தி, எஸ்டிஆர் 48 குறித்து பேசியுள்ளார்.  அதில் அவர், எஸ் டி ஆர் 48 படம் கண்டிப்பாக சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என தெரிவித்துள்ளார். 


மேலும், இந்த படம் பாகுபலி படம் போல உருவாக உள்ளதாகவும். இந்த படம் இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி மற்றும் பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இருவரும் சேர்ந்து இயக்கினால் அந்த படம் எப்படி இருக்குமோ அந்த வகையில் எஸ் டி ஆர் 48 படம் உருவாகி இருக்கிறது என்று மூர்த்தி கூறியுள்ளார். இவர் கொடுக்கும் ஹைப் வைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த படத்தின் அடுத்த அப்டேட்காக காத்திருக்கிறார்கள்.  

Advertisement

Advertisement