• Jan 19 2025

விஜய் பெயர நெஞ்சில பச்சக்குத்தி தெய்வமா கும்பிடுவேன்! நடிகர் ரஞ்சித்தின் திடீர் ப்ரோமிஸ்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

கோவை காந்திபுரம் பகுதியில் புதிய ஸ்டுடியோ திறப்பு விழாவில் பங்கேற்ற பிரபல நடிகர் ரஞ்சித், செய்தியாளர்களையும் சந்தித்து இருந்தார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த விழாவில், நடிகர் விஜய் பற்றி இவ்வாறு கூறியுள்ளார் ரஞ்சித். அதன்படி,

புதுசா யாராவது வந்திட கூடாது, ஏற்கனவே திருடினவன் தான்  திருடிட்டு இருக்கணும், புதுசா ஒருத்தவங்க வந்தா தேர்தலில் நிக்க கூடாதுன்னு நினைக்கிறாங்க. இன்னும் பல நடிகர்கள் நீங்க எழுதி வச்சிக்கோங்க நான் சொல்றேன் 

ஆனா, விஜய் தம்பி அரசியலுக்கு வந்ததற்கு எதிர்ப்பு சொல்லுற ஆள் நான் கிடையாது. நான் தான் ஏற்கனவே சொன்னேன் ஒரு விஜய் இல்லை ஓராயிரம் விஜய் வந்தால் கூட தமிழ்நாட்டை  காப்பாத்த முடியாது. அப்படி யாராவது நடத்திட்டாங்கன்னா அவங்கள நான் தெய்வமா வச்சு கும்பிடுவன். 


இது வரை இடம் பெற்ற தேர்தலில் பார்த்தீங்கன்னா,  மேடை ஏறி பேசிய அரசியல்வாதிகள் 500 பக்கத்திற்கு வாக்குறுதிகள் கொடுப்பாங்க. ஆனா அதை நிறைவேற்றவில்லை என்றாலும் அவர்களை பிடித்து மக்களோ, நீதிமன்றமோ தண்டிக்கப் போவதில்லை.

அதுபோல, தப்பான வாக்குறுதியை சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த யாருமே கில்டியா பீல் பண்றதும் இல்ல.

ஆனா என்னைப்போல சாதாரண மனிதர்கள் எல்லாம் நல்ல ஆட்சி வராதா? எங்களை காப்பாற்ற மாட்டார்களா என்று தான் யோசிப்பார்கள்.

எனவே யாராவது நல்லாட்சி செய்து தமிழ்நாட்டை காப்பாற்றினார்கள் என்றால் அவர்களின் பெயரை நெஞ்சில் பச்சை குத்திக் கொள்வேன். ஆனால் இதுவரையில் அப்படி ஒருவரை காணவில்லை என்றும் கூறியுள்ளார் நடிகர் ரஞ்சித்.

Advertisement

Advertisement