• Jan 19 2025

எப்பவுமே நமக்கு மூன்றாவது இடம் தானா? புலம்பும் சூர்யா குடும்பத்தினர்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரை உலகில் அஜித், விஜய் ஆகிய இருவரும் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள நிலையில் மூன்றாவது இடத்தில் தான் பல ஆண்டுகளாக நடிகர் சூர்யா இருந்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜய் திரை உலகை விட்டு விலக முடிவு செய்துள்ள நிலையில் முதல் இரண்டு இடங்களில் சூர்யா வந்து விடுவார் என்று கூறப்படும் நிலையில் சிவகார்த்திகேயன் அவரை முந்திவிட்டதாக தெரிகிறது.

திரை உலகில் அடுத்த தளபதி யார் என்ற போட்டி நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கு சிவகார்த்திகேயன், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்ட சில நடிகர்கள் போட்டி போடுவதாக தெரிகிறது.




ஆனால் இந்த ரேஸில் தற்போது சிவகார்த்திகேயன் தான் முன்னணியில் இருப்பதாகவும் அவர்தான் விஜய்யின் இடத்தை கிட்டத்தட்ட பிடித்து விடுவார் என்றும் தெரிகிறது.

விஜய் போலவே அதிரடி ஆக்சன் படங்களிலும், குழந்தைகளுக்கு பிடிக்கும் நடிகராகவும், அதுமட்டுமின்றி விஜய் படத்தை இயக்கிய இயக்குனர்களின் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருவதையும் பார்க்கும்போது அவர்தான் அடுத்த இளைய தளபதி என்று கோலிவுட் திரையுலகில் இப்போதே பேச ஆரம்பித்து விட்டனர்.

 
விஜய் போய்விட்டால் எப்படியும் முதல் அல்லது இரண்டாவது இடத்தை பிடித்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எப்போதும் திரை உலகில் நமக்கு மூன்றாம் இடம் தானா என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சூர்யா புலம்பி வருவதாகவும் கூறப்படுகிறது,

இருப்பினும் விஜய் இடத்தை எப்படியும் பிடித்தே தீருவேன் என்று சூர்யா ஆவேசமாக அடுத்தடுத்து படங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 

Advertisement

Advertisement