விஜய் நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜனநாயகன் திரைப்படம் பல்வேறு காரணங்களால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. H. வினோத் இயக்கிய இப்படம், தெலுங்கில் வெளியான பகவந் கேசரி படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. ஆனால் விஜய் ரசிகர்களை கருத்தில் கொண்டு திரைக்கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்தாலும், சென்சார் மற்றும் சட்ட சிக்கல்கள் காரணமாக வெளியீடு தாமதமானது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு படம் இணையத்தில் சட்டவிரோதமாக லீக் ஆனது படக்குழுவிற்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
“ஜனநாயகன்” விஜயின் கடைசி படம் என அறிவிக்கப்பட்டிருந்ததால், இந்த லீக் சம்பவம் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய விஜய் முக்கிய முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது, இப்படத்தை தயாரித்த KVN நிறுவனத்திற்காக மீண்டும் ஒரு படத்தில் நடித்துக் கொடுக்க விஜய் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த படம் விஜய்யின் இறுதி திரைப்படமாக அமையும் என்றும், அதை முன்னணி இயக்குநர் ஒருவர் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!