• Apr 14 2026

யாழ்ப்பாண மண்ணில் கார்த்திக் சுப்புராஜ்.. பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா.?

shali / 1 day ago

Advertisement

Listen News!

கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனமும், ராணா டகுபதியின் ‘ஸ்பிரிட் மீடியா’ தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் தான் “நீளிரா”. இந்த படத்தை இலங்கைத் தமிழர் சோமீதரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நவீன் சந்திரா மற்றும் விது முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், சிவா பத்மயன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


“நீளிரா” திரைப்படம் ஏப்ரல் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. புதிய கதை மற்றும் வித்தியாசமான அணுகுமுறையால் இந்த படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, இலங்கைத் தமிழ் இயக்குநர் உருவாக்கிய படமாக இருப்பதால், இது தனித்துவமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இப்படத்தின் ப்ரொமோஷன் பணிகளுக்காக படக்குழு யாழ்ப்பாணம் சென்றுள்ளது. தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இயக்குநர் சோமீதரன் உள்ளிட்டோர் யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பார்வையிட்டுள்ளனர். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


இந்த வருகை, படத்தின் ப்ரொமோஷனை மட்டுமின்றி, இலங்கை மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement