• Apr 14 2026

விஜய் படத்திற்கு நேர்ந்த கதி.. தம்பி ராமையாவின் வைரல் பேட்டியால் அதிரும் கோலிவுட்.!

shali / 1 day ago

Advertisement

Listen News!

ஜனநாயகன் திரைப்படம் H. வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வந்தாலும், சென்சார் பிரச்சனைகள் காரணமாக இதுவரை வெளியாகாமல் தாமதமாகி வந்தது. இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு இடையே சமீபத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. அதாவது, படம் இணையத்தில் லீக் ஆனதாக தகவல்கள் வெளியாகி படக்குழுவை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


இந்த சம்பவம் குறித்து திரையுலகில் பலரும் தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தம்பிராமையா தெரிவித்த கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் கூறுகையில், “அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தும் போது ஒரு விவசாயி எப்படி வேதனைப்படுவாரோ, அதேபோல் இப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர்கள் மனநிலை இருக்கும்.” என்று உணர்ச்சிகரமாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த லீக் சம்பவம் மிகவும் கவலைக்குரியது என்றும், இதுபோன்ற செயல்கள் சினிமா துறைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகள் கண்டிப்பாக சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement

Advertisement