இந்த ஆண்டு பொங்கல் போட்டியில் தளபதி விஜய்யின் ஜனநாயகன் படமும் பராசக்தி படமும் வெளியாவதாக இருந்தது. இதனால் தளபதி ரசிகர்கள் இதனை கொண்டாட தயாராக இருந்தனர்.
எனினும் இதற்கு இடையில் ஜனநாயகன் படத்தின் சென்சார் போர்டு பிரச்சினை படக் குழுவினருக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுக்கும் தலையிடியாக காணப்பட்டது.
பொங்கலுக்கு விஜயின் படம் ரிலீஸ் ஆக விட்டால் என்ன ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகும் தினத்தன்று தான் எங்களுக்கு பொங்கல் என பலரும் தங்களுடைய மனதை தேற்றி வந்தனர்.
அதே நேரத்தில் பராசக்தி படத்திற்கும் சென்சார் பிரச்சனை வந்தது. ஆனால் அதன் ரூட் கிளியர் ஆகி சொன்னது போலவே கடந்த பத்தாம் தேதி பராசக்தி படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படம் இந்த பொங்கலுக்கு வெளியாகாது என்ற தகவல் உறுதியாகி உள்ளது. ஆனாலும் அந்த தினத்தன்று தெறி படம் மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
இயக்குனர் அட்லீ - விஜய் கூட்டணியில் உருவான தெறி திரைப்படம் விஜயின் கேரியரில் முக்கிய படமாக அமைந்தது. இந்த படம் வசூலிலும் சாதனை படைத்தது.
தந்தை - மகள் பாசத்தை எடுத்துக்காட்டும் படமாக அமைந்துள்ளதால் இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனால் குடும்பம் குடும்பமாக மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
Listen News!