சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மனோஜ் அம்மாக்கு தெரிஞ்சா ஏதாவது சொல்லுவாங்க என்று தான் நான் இவளா நாளா எதுவும் கதைக்காம இருந்தனான் என்று சொல்லுறார். அதுக்கு அண்ணாமலை, அண்டைக்கே தெரியும் என்று சொல்லியிருக்கலாம் என்று சொல்லுறார். அதனை அடுத்து விஜயா அவள் பண்ண அந்தத் தப்புக்கு நீ என்ன தண்டனை கொடுத்த என்று கேக்கிறார். அதுக்கு அண்ணாமலை விஜயாவப் பாத்து நீ கொஞ்சமாவது பொறுப்போட பேசுறியா என்று கேக்கிறார்.
அதைத் தொடர்ந்து விஜயா தன்ன எல்லாரும் ஏமாத்திட்டாங்க என்று சொல்லுறார். மேலும் மனோஜைப் பாத்து நிஜமா உனக்கு எல்லாம் தெரியுமா என்று கேக்கிறார். இதனை அடுத்து அண்ணாமலை விஜயா கத்திட்டு இருக்காதா என்று சொல்லுறார். மேலும் ஸ்ருதி ரோகிணியப் பாத்து உண்மையாவே நீங்க மலேசியால இருந்து தான் வந்தனீங்களா என்று கேக்கிறார்.
அதைத் தொடர்ந்து ரோகிணி தன்ர வாழ்க்கையில நடந்ததெல்லாத்தையும் சொல்லுறார். மேலும் மனோஜைக் கலியாணம் பண்ணுறதுக்காகத் தான் இப்படி எல்லாம் பொய் சொன்னேன் என்று சொல்லுறார். அத்துடன் கலியாணத்துக்கு பிறகு சொல்லலாம் என்று நினைச்சேன் ஆனா சொல்லுற சந்தர்ப்பம் வரல என்று சொல்லுறார். இதனைக் கேட்ட விஜயா அப்பவே சொல்ல வேண்டியது தானே எனக்கு சொத்து எதுவும் இல்ல பிச்சைக்காரி தான் எனக் கோபமாகக் கேக்கிறார்.
இதனை அடுத்து ரோகிணி கொஞ்ச நாளுக்கு முன்னாடியே என்ர அப்பா இறந்திட்டார் என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து ரோகிணி தன்ர பார்லரை வித்திட்டன் என்று சொல்லுறார். அதைக் கேட்டு அங்கிருந்த எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!