பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, சுதாகர் உங்க எல்லாருக்கும் ஓகே என்டா உடனே கலியாணத்த வச்சிரலாமோ என்று கேக்கிறார். அதைக் கேட்டு எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். அதை அடுத்து பாக்கியா இப்ப என்ன அவசரம் என்று கேக்கிறார். மேலும் டைம் எடுத்துப் பொறுமையா செய்யலாம் என்று சொல்லுறார். அதைக் கேட்ட சுதாகர் நிதீஷ் வேலை விஷயமா அடிக்கடி வெளிநாடு போறவன் அதுதான் வேளைக்கு செய்வமோ என்று கேட்டனான் என்கிறார்.
அதைக் கேட்ட கோபி எங்களுக்கு உங்கட பாமிலியப் பிடிச்சிருக்கு ஆனா உடனே எப்புடி கலியாணம் பண்ணுறது என்று கேக்கிறார். மேலும் நீங்க சொல்லுற இந்தக் கொஞ்ச நேரத்தில கலியாணத்த பண்ண முடியுமோ என்று தெரியல என்கிறார். அதுக்கு சுதாகர் அதுதான் ரெண்டு வாரம் இருக்குத் தானே தாராளமா செய்யலாம் என்கிறார். அத்துடன் நல்ல காரியத்த எப்பவுமே தள்ளிப்போடக் கூடாது என்கிறார்.
இதனை அடுத்து பாக்கியா செய்த சாப்பாடு சரியில்ல என்று ஈஸ்வரி சொல்லுறார். அதைக் கேட்ட பாக்கியா திடீரென்று மாப்பிள வீட்டுக்காரங்க வாரெண்ட பதற்றத்தில தான் அப்புடி செய்திட்டன் என்று சொல்லுறார். இதனை அடுத்து கோபி பாக்கியாவப் பாத்து ஏன் சுதாகரை முன்னாடியே தெரியும் என்று சொல்லேல எனக் கேக்கிறார்.
இதனை அடுத்து இனியா வந்து நான் மாப்பிள பாக்கத் தான் சம்மதம் சொன்னான் கலியாணம் பண்ண இல்ல என்கிறார். மேலும் எனக்கு இந்தக் கலியாணம் வேணாம் என்று சொல்லுறார்.அதுக்கு ஈஸ்வரி யார் என்ன சொன்னாலும் இந்தக் கலியாணம் நடக்கும் என்று சொல்லுறார். இதனை அடுத்து செழியன் இனியாவ தனியாக் கூப்பிட்டுக் கதைத்துக் கொண்டிருக்கிறார். இதனை அடுத்து பாக்கியா ரெஸ்டாரெண்டுக்குப் போய் செல்விக்கு நடந்ததெல்லாத்தையும் சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!