• Oct 31 2024

மீனா வீட்டுக்குள் புகுந்து சத்யாவை வெளுத்து விஜயா..! பாக்கியாவுக்கு விழுந்த செருப்படி

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்கள் தான் சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியல் இரண்டுமே டிஆர்பி ரேட்டிங்கில் அடுத்து பிடித்து முன்னிலைக்கு வருவதற்காக பல பல சுவாரசியங்களை உள்ளடக்கி ஒளிபரப்பாகும்.

அந்த வகையில் இறுதியாக வெளியான ப்ரோமோவின் படி புதிய திருப்பங்கள் இந்த சீரியல்களில் இடம் பெற்றுள்ளன. அதன்படி குறித்த சீரியல்களில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோவை பார்ப்போம்.

அதன்படி சிறகடிக்க ஆசை சீரியலில், ரோகினி ஆசைப்பட்ட படியே சத்யாவின் வீடியோவை சிட்டியிடம் கொடுத்துவிட்டு அந்த வீடியோவை விஜயாவிடம் கொண்டு வந்து காட்டுகின்றார். அதில் விஜயாவிடம் இருந்து சத்யா பணம் திருடுவது காட்டப்படுகின்றது.


இதை தொடர்ந்து என்னுடைய காசை அந்த பூக்கார குடும்பம் தான் எடுத்ததா என்று ஆவேசத்தில் சத்யா வீட்டுக்கு சென்று அவரை இழுத்து அடித்து துவைக்கின்றார் விஜயா. எனவே இந்த ப்ரோமோ இப்படி வெளியாகியுள்ளது. இதில் விஜயா எடுக்கப்போகும் முடிவு என்ன? முத்துவுக்கு தனது போனை எடுத்தது ரோகிணித்தான் என்ற விடயம் தெரிய வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அதேபோல பாக்கியலட்சுமி சீரியலில் டான்ஸ் காம்படீஷனில் இனியா பங்கு பற்றுகின்றார். அதில் இனியா தான் இறுதியில் வெற்றி பெறுகின்றார். இனியா வெற்றி பெற்றதாக அறிவிக்கும் போது கோபி துள்ளி குறித்து சந்தோஷப்படுகிறார்.


அதன் பின்பு இனியாவுக்கு பரிசு கொடுப்பதற்காக அழைக்க அவர் கீழே இறங்கி வந்து பாக்கியாவை கூப்பிடாமல் கோபியை அழைத்துச் செல்கின்றார். இதனால் கோபி செல்லும்போது பாக்கியாவை ரொம்பவும் கேவலமாக பார்த்துவிட்டு செல்லுகின்றார்.

மேலும் மேடைக்கு போய் கர்வமாக நிற்கின்றார் கோபி. தான் வெற்றி பெற்றதற்கு காரணம் எனது அப்பா தான் என்று இனியாவும் கோபியை புகழ்ந்து பேசி இருக்கிறார். இதனால் பாக்கியா மனம் தாங்காமல் அங்கிருந்து செல்லுகின்றார் இதுதான் இறுதியாக வெளியான ப்ரோமோ.

Advertisement