• Oct 31 2024

TVK தலைவரின் சொகுசு ராஜா பற்றி தெரியுமா? அரசியல் என்ட்ரிக்காக விமானத்தை மிஞ்சும் வசதிகள்?

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக காணப்படும் விஜய் கார் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருவார். அதன்படி புதிதாக லான்ச் செய்யப்படும் கார்களை வாங்கவும் ஆர்வம் காட்டும் இவர், சுமார் 20க்கும் மேற்பட்ட கார்களை வைத்துள்ளார்.  அவை இரண்டு கோடிக்கு மேல் மதிப்பு கொண்ட கார்களும் அடங்குமாம்.

2012 ஆம் ஆண்டு  ரோல்ஸ் ராய்ஸ் கோஷ்ட் காரை லண்டனில் இருந்து இறக்குமதி செய்துள்ளார் விஜய். இந்த காருக்கு வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டில் வழக்கு நீதிமன்றம் வரை சென்றது. அதன் பின்பு அந்த காரை விற்பனை செய்த கையோடு லெக்சஸ் LM 350h  என்ற காரை வாங்கினார்.

கடந்த மார்ச் மாதம் புதிதாக சந்தையில் அறிமுகமான புதிய காரை விஜய் வாங்கி உள்ளார். ஏற்கனவே முன்பதிவு செய்து சந்தைக்கு வந்ததுமே அதனை விஜய் பெற்றுக் கொண்டதாக கூறப்படும் நிலையில் அந்த கார் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி, ஆடி, பிஎம்டபிள்யூ, ரோல்ஸ் ராயல்ஸ் போன்ற கார்களுக்கு போட்டியாக லெக்சஸ் நிறுவனம் தயாரித்த புதிய காருக்கு ஆகாயத்தில் பறக்கும் விமானத்திற்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு காரணம் அதில் நான்கு இருக்கைகள் என இரண்டு வேரியண்டுகளில் வெளியான லெக்சஸ் LM 350h காரில் விஜய் வாங்கி இருப்பது 4 சீட்டர் வேரியண்ட் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்டதால் இந்த கார் சொகுசு ராஜா என அழைக்கப்படுகிறது.


இதில் 23 ஸ்பீக்கர் கொண்ட ஆடியோ சிஸ்டமும் உள்ளது. ஃபோல்டுஅவுட் மேஜைகள், வயர்லஸ் சார்ஜர், புத்தம் படிக்க ஏதுவாக ரீடிங் லைட், ஸ்டார் ஓட்டலில் இருப்பது போல பல பல கண்ணாடி என சகல வசதியும் காருக்குள்ளேயே இருக்கிறது.

லெக்சஸ் காரிக்குள்ளேயே தண்ணீர், குளிர்பானங்களை வைத்துக்கொள்ள குட்டியாக இருக்கைக்கு அருகே பிரிஜ்ட் இருக்கிறது என்பது ஆச்சரியத்தில்   ஆழ்த்தி உள்ளது. மேலும் வெயில் காலத்திற்கு குளு குளுவென புல் சேட்டிலைட் ஏசி, குளிர்காலத்திற்கு வாமு் வெதர் ஆகிய வசதிகளும் காணப்படுகின்றது.

பாதுகாப்பு அம்சமாக காரை சுற்றிலும் 360 டிகிரி சூழலில் கேமரா சிஸ்டம் உள்ளது. விஜய் வைத்துள்ள கார்களுக்கு இந்த சிஸ்டம் உள்ளது. இவ்வாறு விஜய் புதிதாக லெக்சஸ் LM 350h அதி நவீன சொகுசு காரை வாங்கியதற்கு முக்கிய காரணமே அவரது அரசியல் ரீ என்றி தான் என்கிறார்கள். 




Advertisement