• May 21 2024

‘அஜித் ரசிகர்களை நினைத்து விஜய் பயந்தார்’ - பல வருடங்கள் கழித்து செல்வபாரதி கூறிய சீக்ரெட் இது தான்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யை வைத்து நினைத்தேன் வந்தாய், வசீகரா, ப்ரியமானவளே என பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் செல்வபாரதி. நடிகர் விஜய் பற்றி முன்பு அவர் கொடுத்த சுவாரஸ்யமான தகவலினை  பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.


அவர் கூறியதாவது ‘‘சுந்தர் சி.,யிடம் வெளியே வந்து படம் பண்ணலாம்னு ஐடியா பண்ணும் போது, சபா இயக்கத்தில் பிரபுதேவா நடித்த விஐபி.,படத்தை தாணு சார் பண்ணிட்டு இருந்தார். அந்த படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, விஸ்வநாதன் என்கிற மேனேஜர் ஒருவர் வந்தார். இயக்குவர் ராகவேந்தர் சார் அழைத்து வரச் சொன்னதாக கூறினார். அங்கே போனால், அஸ்வித் தத், அல்லி அர்விந்த் சார், சிரஞ்சீவி சார் எல்லாரும் உட்கார்ந்திருக்காங்க. 

எனக்கு ஒரே டவுட். நம்மை தான் கூப்பிட்டாங்களா என்று. எனக்கு அப்போ தெலுங்கும் தெரியாது. ராகவேந்தர் சார் தான் பேசினார். ‘உள்ளத்தை அள்ளித்தா பார்த்தேன், நீங்க தானே ரைட்டர்? நல்லா இருந்தது’ என்றார். பெல்லி சந்தடினு ஒரு படம் தெலுங்கில் பண்ணிருக்கேன், அதை தமிழில் நீங்க டைரக்ட் பண்ணுங்க என்றார்.

வெளியில் வந்தால் நண்பர்கள் பயமுறுத்துகிறார்கள். ‘முதல் படமே ரீமேக் படம் பண்ணா, உன்னை அப்படியே முத்திரை குத்திடுவாங்க’ என்று பயமுறுத்துகிறார்கள். அவ்வளவு பெரிய ஆட்களிடம் ஒப்புக்கொண்டு வந்துவிட்டு, எப்படி மறுப்பது?

 

கார்த்திக் சாரிடம் பேசினால், அவர் கேட்கும் சம்பளம் இருவருக்கும் ஒத்துப்போகவில்லை. எனக்கு அந்த படம் பண்ணும் ஆர்வம் போய்விட்டது. ஒரு நாள் காரில் அதே மேனேஜர் விஸ்வநாதன் உடன் காரில் போய்க் கொண்டிருந்த போது, இது தான் எஸ்.ஏ.சி., அலுவலகம் என்று காண்பித்தார். ‘சார், விஜய்யிடம் பேசிப்பார்ப்போமோ?’ என்று கேட்டேன். ‘ஓ கேட்கலாமே’ என்று அவரும் சரி சொல்ல, இருவரும் போய்  எஸ்.ஏ.சி., சாரிடம் கூறினோம்.

அவர்கள் அனைவரும் அந்த தெலுங்கு படத்தை பார்த்துவிட்டு, உடனே ஓகே சொல்லிட்டாங்க. எனக்கு ஒரே ஷாக். அப்போது தான் பூவே உனக்காக ஹிட் கொடுத்து, காதலுக்கு மரியாதை ரிலீசுக்கு விஜய் காத்திருக்கார். அதுவரை விஜய்யை எல்லாரும் சார் என்று தான் அழைத்துக்கொண்டிருந்தார்கள். நான் முதல் சந்திப்பிலேயே, ‘தம்பி’ என்றேன், அவர் அண்ணே என்றார். பின்னாளில் அவர் ‘ண்ணா’ என்று அழைப்பதற்கு பிள்ளையார் சுழி போட்டது நான் தான். 

மீண்டும் ப்ரியமானவளே படத்தில் நாங்கள் இணைகிறோம். அதுவும் தெலுங்கு டப். ஒன்றுக்கு இரண்டு முறை அந்த படத்தை நானும் விஜய்யும் பார்த்தோம். விஜய்க்கு ஒரே பயம். இரண்டாம் பாதியில் நான் வில்லனா தெரிவேனே? என்று விஜய் சொல்கிறார். சீமந்தம் சீனில் டையலாக்கை ஏற்றிடலாம் என அவரை சமாதானம் செய்தேன். மைசூரில் ‘ஜூன் ஜூலை மாதத்தில்’ பாடல் ஷூட் போயிட்டு இருக்கும் போது, விஜய்க்கு மகன் பிறந்த தகவல் வந்தது. அவர் பயங்கர ஹேப்பி.

அந்த பாடலுக்கு பெண் கெட்டப் போட விஜய்யிடம் கேட்டால், அவர் ஒப்புக்கொள்ளமாட்டேன் என்கிறார். நானும் எவ்வளவோ சொல்லும் விஜய் ஒத்துக்கொள்ளவில்லை. திடீர்னு மகன் பிறந்த செய்தி வர, பயங்கர குஷியாகிட்டார். அந்த சமயத்தை பயன்படுத்தி, ‘அந்த லேடி கெட்டப் மட்டும் போடலாம்’ என்றேன். ‘என்ன கெட்டப் வேண்டுமானாலும் போடுங்க போங்க’ என்று சந்தோசத்தில் ஒத்துக் கொண்டார். உடனே போட்டு எடுத்துட்டோம்.  எடுத்து முடித்து இரண்டாவது நாள், ‘என்ன இந்த கெட்டப் எடுத்து வெச்சிருக்கீங்க, வேண்டாம் வேண்டாம்’ என்று மறுபடி மறுத்தார். ‘நல்லா இருக்கு தம்பி’ என்று சமாதனப்படுத்தினோம். அஜித் ரசிகர்களை நினைத்து கொஞ்சம் யோசித்தார்’’என்றார்.


Advertisement

Advertisement