• Jan 19 2025

சூரி அண்ணனோட திறமை எனக்கு அப்பவே தெரியும்.. ஆனா நான் சொன்ன கதைக்கு ஒத்துக்கல.. எஸ்கே நெகிழ்ச்சி

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கிக் கொண்டிருந்த சூரி, வெற்றிமாறன் இயற்றிய விடுதலைப் படத்தின் ஊடாக நாயகனாக அவதாரம் எடுத்தார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்பு  முனையை ஏற்படுத்திக் கொடுத்தது. இதில் சூரியன் நடிப்பு மக்களால் மிகவும் வரவேற்கப்பட்டது

இதைத் தொடர்ந்து தற்போது தனக்கேற்ற வகையில் கதையின் நாயகனாக பல படங்களை தெரிவு செய்து நடித்து வருகின்றார். 

அந்த வகையில் உருவான படம் தான் கருடன். இந்த படம் வெற்றிமாறன் கதையில் உருவாக துறை செந்தில் குமார் இயக்கியிருந்தார்.


இந்த திரைப்படத்தில் நடிகர் சூரியுடன் சசிகுமார், உன்னி முகுந்தன், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த படத்தின் டீசர் இன்றைய தினம் வெளியானது. அதில் சூரியின் நடிப்பு வியக்கத்தக்கதாக காணப்பட்டது.

இந்த நிலையில் கருடன் பட விழாவில் சிவகார்த்திகேயன் பேசுகையில், இந்த கதையின் நாயகனாக நடிங்க என்று சூரி அண்ணா கிட்ட முதல் முதலா கதை சொன்னது நான் தான். சீம ராஜா படம் நடிக்கும் போதே சொன்னேன். அவர் வேண்டாம் தம்பின்னு சொல்லிட்டார். சூரி அண்ணனோட திறமை பற்றி எனக்கு அப்பவே நல்லா தெரியும். காமெடி பண்றவங்களால தான் சீரியஸ் கதாபாத்திரங்களிலும் சிறப்பாக பண்ண முடியும் அவர்களை யாரும் குறைச்சு மறைப்படாதீங்க என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement