• Jan 18 2025

Chef Bhat ஐ விரட்டியடித்த விஜய்டிவி.. தாமுவும் மறைமுக தாக்குதல்? வெளியான உண்மை

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் குக் வித் கோமாளி. இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் அடுத்த சீசனும் ஆரம்பிக்கப்பட உள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் திடீரென வெங்கடேஷ் பட், இயக்குனர், தயாரிப்பாளர் என ஒவ்வொருவரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்கள். 

இதை தொடர்ந்து, தாமுவுக்கு ஜோடியாக மதம் ரங்கராஜ் இந்த சீசனை தொகுத்து வழங்குவார் என தகவல் வெளியானது. அடுத்தடுத்து குக் வித் சீசன் 5இல் பங்குபற்றும் போட்டியாளர்கள் பற்றிய விபரம் வெளியானது.


மறுபக்கம் வெங்கடேஷ் பட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்' சிங்கம் சிங்கிளா தான் வரும். நீங்க சொல்லிட்டீங்க நாங்க ஆரம்பிக்கிறோம்' என பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில்,  வெங்கடேஷ் பட் மற்றும் தாமுக்கு இடையில் விரிசல் விழுந்துள்ளதாக கூறபடுகிறது.

இதற்கு காரணம் வெங்கடேஷ் பட் தனது இன்ஸ்டா பக்கத்தில் யாரையோ குத்திக் காட்டுவதற்காகவே சிங்கம் சிங்கிளா தான் வரும், பன்னி தான் கூட்டமா வரும் என ரஜினி ஸ்டைலில் தொடர்ந்தும் போஸ்ட் போட்டு வருகிறார். இதற்கு தாமுவும் நேராக தாக்காமல் மாறி மாறி பாட்டு போட்டு தாக்குவதாகவும் கூறபடுகிறது.

இதேவேளை, இவருடைய போஸ்டை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை விஜய் டிவி தான் இவரை விரட்டி விட்டதோ என்றும், மாதம்பட்டி ரங்கராஜ் தான் அவரின் பட்டத்தை பறித்த ஆளோ என குழம்பி வருகிறார்கள்.

Advertisement

Advertisement