• Jan 18 2025

ஜெமினி two ஆ இருக்குமோ! சியான் விக்ரம் போஸ்ட்ல இருக்குற சஸ்பெண்ஸ் என்ன தெரியுமா?

Nithushan / 9 months ago

Advertisement

Listen News!

தமிழில் ஆக்சன் ஹீரோக்கள் , கமர்சியல் ஹிரோக்கள் , டான்ஸ் ஹீரோக்கள் என கூறினால் பலர் ஞாபகத்திற்கு வருவார்கள். ஆனால் அதுவே அருமையான நடிப்பு , உடலை வதைத்து நடிக்கும் திறமை , கதாபாத்திரமாகவே வாழும் திறமை என்று கூறினால் ஞாபகம் வருவது ஒருசிலர் மாத்திரமே அவ்வாறு கமலுக்கு அடுத்து நடிப்பில் சிறந்து விளங்குபவர் சியான் விக்ரம்.


என்காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் நடித்த சேது திரைப்படம் நல்ல வரேற்ப்பை கொடுத்தது. தொடர்ந்து சாமி திரைப்படத்தின் மூலம் பக்காவான மாஸ் ஹீரோவாக மாறி இருந்தாலும். இவர் இறுதியாக கொடுத்த ஹிட் ஐ  திரைப்படம் ஆகும்.


இவ்வாறு ஹிட்டுக்காக காத்திருக்கும் விக்ரம் சமீபத்தில் நடிக்கும் படங்கள் எதுவும் ஓடவில்லை என்றே கூறலாம். இந்த நிலையிலேயே தனது x தல பக்கத்தில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர்  இன்னும் சில தினங்களில் ஒரு அப்டேட் உள்ளது என்று கூறியது மட்டுமின்றி ஓ போடு என்பதை மறக்காதீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலும் ஜெமினி திரைப்படத்தின் 2 ஆம் பாகமாக இருக்கலாம் என பலரால் கூறப்படுகின்றது. 

அந்த போஸ்ட் இதோ  


Advertisement

Advertisement