விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விஜய் டிவியில் துவங்கப்பட்ட சீரியல் 'நீ நான் காதல்'. ரொமான்டிக் டிராமா ஜர்னரில் ஒளிபரப்பாகி வருகிறது. இது ஹிந்தி சீரியலை தமிழில் டப் செய்யப்பட்டு தற்போது முழுக்க முழுக்க தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த சீரியலில் ராகவ்வின் அக்காவாக, அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வி ஜே தனுஷிக் விஜயகுமார். இவருக்கு தற்போது சில நாட்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் முடித்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை அவர் வெளியிட வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தமிழில் சில தொலைக்காட்சிகளில், ஆங்கரிங் செய்ய துவங்குவதற்கு முன்பே, ஸ்ரீலங்கன் தொலைக்காட்சிகள் தான் பணியாற்றினார். பார்ப்பதற்கு மார்டன் பெண்ணாக தெரிந்தாலும், இலங்கை தமிழில் மிகவும் அழகாக பேசக் கூடியவர். இளம் வயதிலேயே ஆங்கரிங் துறையை தேர்வு செய்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்த துவங்கினார்.
மேலும் இலங்கை ஒரு சிறிய நாடு என்பதால், அவரால் குறிப்பிட்ட தன்னுடைய திறமையை வளர்த்து கொண்டு இந்தியா வர முடிவு செய்தார். இதன் பின்னரே பல இன்னல்களை தாண்டி வந்து தற்போது விஜய் டிவி சீரியலில் நடித்து வருகிறார். தற்போது தான் காதலித்த காதலருடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இது குறித்த புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!