• Jun 23 2024

முக்கிய சீரியலுக்கு முடிவு கட்டிய விஜய் டிவி.. விரைவில் கிளைமேக்ஸ் காட்சி

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் உள்ள டிவி சேனல்கள் போட்டி போட்டு சீரியல்களையும் ரியாலிட்டி ஷோக்களையும் விதவிதமான நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவருவதில் மும்முரம் காட்டி வருகின்றது.

விஜய் டிவி, சன் டிவிக்கு இடையில் கடும் போட்டி நிலவுகின்றது. இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங் முன்னிலை  பிடிப்பதற்கும் போட்டி போட்டு வருவதோடு, விறுவிறுப்பில்லாத சீரியல்களை சீக்கிரத்தில் முடித்து அடுத்தடுத்து புதிய சீரியல்களை ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த நிலையில், விஜய் டிவியில் இன்னும் ஒரு முக்கிய சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஏற்கனவே இதில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து அதற்கு பதிலாக வீட்டுக்கு வீடு வாசல் படி சீரியல் ஒளிபரப்பானது.

தற்போது கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு இன்னும் 300 எபிசோடுகள் கூட தாண்டாத மோதலும் காதலும் சீரியலின்  கிளைமேக்ஸ் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாம். இந்த தகவல் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement